மதுரை: மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் கோயில் ஊழியர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானர். சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தற்காலிக ஊழியர் அஜித்குமார் (27). நகை திருட்டு வழக்கு தொடர்பான போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிா்வலையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா். மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனை தொடர்ந்து வழக்கை சிபிஐ டிஎஸ்பி மோகித்குமார் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் கோயில் ஊழியர்கள் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானர். தனிப்படை போலீசாரின் ஓட்டுநர் ராமச்சந்திரன் 2வது நாளாக சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிரவீன்குமார், வினோத்குமார் உள்ளிட்டோர் ஆஜரானர்.