வீரவநல்லூர்: சேரன்மகாதேவி அருகே உள்ள மேலஉப்பூரணி மூர்த்தி மாடசுவாமி திருக்கோவில் கொடைவிழா நாளை (31ம்தேதி) தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இதையொட்டி நாளை மாலை 5 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதல், இரவு 7 மணிக்கு சுவாமிக்கு கும்பம் ஏற்றுதல், இரவு 10 மணிக்கு வில்லிசை ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து நாளை மறுநாள் (வெள்ளி) அதிகாலை 4 மணிக்கு சாஸ்தா பிறப்பு, மதியம் 12 மணிக்கு பூச்சாற்றுதல், 12.30 மணிக்கு கொம்புதப்பு, மகுடம், மதியம் 2 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு சுவாமிக்கு அலங்கார தீபாராதனையும், நள்ளிரவு 12 மணிக்கு சுவாமி மயானம் சென்று வருதல், 12.30 மணிக்கு பரன் ஊட்டுபூஜை ஆகியவை நடக்கிறது.
நிறைவுநாள் விழா சனிக்கிழமை அன்று காலை 7 மணிக்கு கைவெட்டு பூஜையும், 8 மணிக்கு பரன் ஊட்டுபூஜையும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை மேலஉப்பூரணி மூர்த்தி மாடசுவாமி ஆன்மீககுழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.