தமிழ்நாட்டு விளையாட்டு வீரர் - வீராங்கனையர்களுக்கு திராவிடமாடல் அரசு என்றும் துணை நிற்கும்: அமைச்சர் உதயநிதி உறுதி
சென்னை: தமிழ்நாட்டு விளையாட்டு வீரர் - வீராங்கனையர்கள் இன்னும் பல சாதனைகள் புரிய திராவிடமாடல் அரசு என்றும் துணை நிற்கும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பாக நாம் அறிமுகப்படுத்திய புதிய திட்டங்கள், முன்னெடுப்புகள் எந்த அளவுக்கு, தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களின் sports career-க்கு உதவியிருக்கிறது, முன்னேற்றத்தைத் தந்திருக்கிறது என நாமக்கல் மாவட்ட SDAT விளையாட்டு விடுதி மாணவிகளுடனான சமீபத்திய சந்திப்பில் உணரமுடிந்தது.
உலகத் தரத்திலான விளையாட்டு உட்கட்டமைப்புகள், தங்கும் வசதி, சத்தான உணவு, சுத்தமான குடிநீர், பயிற்சி , போட்டிகளுக்கான உதவித்தொகைகள் என அரசின் எல்லா புதிய முன்னெடுப்புகளுக்கும் விளையாட்டு விடுதி மாணவிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்கள். மேலும் தமிழ்நாட்டு விளையாட்டு வீரர் - வீராங்கனையர்கள் இன்னும் பல சாதனைகள் புரிய, அவர்களின் கனவுகள் நனவாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான நம் திராவிடமாடல் அரசு என்றும் துணை நிற்கும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.