சென்னை: தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்,"திமுகவை எதிர்ப்பவர்கள் இன்னும் கூட்டணி வடிவத்தையே பெறவில்லை. திமுக தலைமையில் கூட்டணி வலுவாக உள்ளது. ஓரணியில் தமிழ்நாடு என்ற அடிப்படையில் திமுக கூட்டணி வலுப்பெற்று வருகிறது.
திமுகவை எதிர்க்கும் சக்திகள் சிதறிக்கிடக்கின்றன. அதிமுக - பாஜக இடையே முரண்பாடு நீடித்து வருகிறது. அவமானப்படுகிறோம் என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. வரும் தேர்தலில் திமுக. கூட்டணியா? அதிமுக. கூட்டணியா? என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது. திமுக, அதிமுக கூட்டணியை தாண்டி உருவாகிற கூட்டணி தமிழ்நாட்டில் முக்கியத்துவம் பெறாது."இவ்வாறு கூறினார்.