Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழகத்தில் உள்ள பெண்கள் தங்கும் அரசு இல்லங்களில் பாதுகாப்பு பணிக்கு பெண் காவலர்கள் மட்டுமே நியமனம்: சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள பெண்கள் தங்கும் அரசு இல்லங்களில் பாதுகாப்பு பணிக்கு பெண் காவலர்கள் மட்டுமே நியமனம் என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கூறியுள்ளார்.சென்னை சேப்பாக்கம் லேடி வில்லிங்டன் கல்லூரி வளாகத்தில் உள்ள சமூக நலத்துறை ஆணையரகத்தில் அமைச்சர் கீதா ஜீவன் நிருபர்களிடம் கூறியதாவது: சமூக நலத்துறைகட்டுப்பாட்டில் இயங்கி வரும் சேவை இல்லத்தில் உதவி தேவைப்படும் குழந்தைகள் தங்கி படித்து வருகின்றனர். ஒரு மாவட்டத்தில் உள்ள இல்லத்தில் 13 வயது குழந்தைக்கு காவல் பாலியல் சீண்டலில் முயற்சித்துள்ளார்.

அந்த குழந்தைக்கு காலில் அடிப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தற்போது அந்த குழந்தை நலமான உள்ளார். இதில் அந்த குழந்தையின் பெயர், மாவட்டம், விவரங்களை தெரியப்படுத்த வேண்டாம் என அவரின் தாயார் கோரிக்கை வைத்துள்ளார். சம்பவம் நடைபெற்ற இல்லத்தில் 8 சிசிடிவி கேமராக்கள் உள்ளது. தற்போது அதனை காவல் துறையினர் ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.அந்த காவலரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை இந்த மாதிரியான சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை. இருப்பினும் 130 குழந்தைகள் உள்ள இல்லத்தில் உடனடியாக 3 பெண் காவலர்களை கூடுதலாக நியமிக்கப்பட உள்ளனர். பெண்களுக்கான அனைத்து விடுதிகளில் பெண் காவலர்கள் நியமிக்கப்படும்.

வரும் நாட்களில் தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசு இல்லங்களிலும் பெண் காவலர்கள் மட்டுமே நியமிக்கப்படும். 1089 எண்ணில் புகார் அளிப்பதற்காக அழைப்புகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அரசு இல்லங்களில் உள்ள பெண்கள் புகார் அளிக்க வேண்டும் என்றால் 1089 எண்ணிற்கு தொடர்ப்பு கொள்ளலாம். குழந்தைகள் திருமணம் அதிகரிப்பதற்கு தானே முன்வந்து திருமணம் செய்யும் குழந்தைகள் போக்சோ சட்டத்தின் கீழ் வருகிறது. போக்சோ சட்டத்தின் வழக்கு 48 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு காரணமாக தானே முன்வந்து திருமணம் செய்வதால் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.