சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
வெப்பநிலையை பொறுத்தவரை ஓரிரு இடங்களில், அதிகபட்ச வெப்பநிலை 2ல் இருந்து 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை, இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.
அதிகபட்ச வெப்பநிலை 36ல் இருந்து 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27ல் இருந்து 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும். மேலும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் வரும் 19ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகள், ஆந்திர கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகள், அரபிக் கடல் பகுதிகளிலும் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.