Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ் புத்தாண்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

வைகோ(மதிமுக):இயற்கைத் தாய் நம்மைக் களிப்படையச் செய்யும் காலம். மலரும் சித்திரையை மகிழ்வோடு கொண்டாடுவோம்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ் ):ஒன்றிய பா.ஜ.க. அரசால் தமிழர்களின் உரிமைகளும், தன்மானமும் பறிக்கப்பட்டு வருவதை மீட்டெடுக்கும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும்.

டிடிவி தினகரன்(அமமுக):மக்களின் உள்ளத்திலும், எண்ணத்திலும் புதிய நம்பிக்கை, புத்துணர்வை விதைப்பதாக இத்தமிழ்ப் புத்தாண்டு அமையட்டும்.

திருநாவுகரசு (காங்கிரஸ் எம்.பி) : உலகெங்கும் வாழும் நம் தமிழ் மக்கள் அனைவரின் வாழ்விலும் வளமும். நலமும் பெருகிட பிரார்த்திக்கிறேன்.

ஜி.கே.வாசன் (தமாக): அனைவருக்கும் இந்த தமிழ் புத்தாண்டு வசந்தகாலமாக அமையட்டும்.

அன்புமணி (பாமக தலைவர்) : இந்த நாள் தமிழர்களின் வாழ்வில் அமைதி, வளம், முன்னேற்றம், மனநிறைவு, வெற்றி, மகிழ்ச்சி, நல்லிணக்கம் உள்ளிட்ட அனைத்து நன்மைகளும் நிறைவதன் தொடக்கமாக அமைய வேண்டும்.

எர்ணாவூர் நாராயணன்:ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் முத்திரை பதிக்கும் முத்தான சிந்தனைகள் உருவாகட்டும்.

என்.ஆர்.தனபாலன்: உலகை தமிழால் ஆளுவோம் என்கிற வாக்கியம் மெய்ப்படுவதாக இந்த புத்தாண்டு அமையட்டும்.

தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி செகரட்டரி ஜெனரல் மு.பன்னீர்செல்வம்: வீட்டில் மகிழ்ச்சி நிறையட்டும். கனவுகள் அனைத்தும் நனவாக அமையட்டும்.

இதேபோல, தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் சங்க தலைவர் சேம நாராயணன், தமிழ்நாடு முஸ்லீம் லீக் கட்சி நிறுவன தலைவர் முஸ்தபா, விஜய் வசந்த் எம்.பி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, பெருந்தலைவர் நமதுரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் செங்கை பத்மநாபன், இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் ஆ.ஹென்றி, இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்க தலைவர் வி.என்.கண்ணன், புரட்சிபாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி, தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் நாசே.ராமச்சந்திரன், தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் கொளத்தூர் ரவி, தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராகம் சௌந்தரபாண்டியன் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.