ஈரோடு மாவட்டம் கீழ்பவானி கால்வாயில் இருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவு..!!
சென்னை: ஈரோடு மாவட்டம் கீழ்பவானி கால்வாயில் இருந்து நாளை முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து 2025-2026-ஆம் ஆண்டு, முதல்போக பாசனத்திற்கு, கீழ்பவானித் திட்டப் பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மூலமாக 103500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 31.07.2025 முதல் 14.08.2025 முடிய நாளொன்றுக்கு 2300 கனஅடி/விநாடி வீதம் 15 நாட்கள் சிறப்பு நனைப்பிற்கு 2980.80 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் 15.08.2025 முதல் 12.12.2025 முடிய 120 நாட்களுக்கு முதல்போக நன்செய் பாசனத்திற்கு 23846.40 மில்லியன் கன அடிக்கு மிகாமலும் ஆக மொத்தம் 135 நாட்களுக்கு 26827.20 மில்லியன் கன அடிக்கு மிகாமல்அணையின் தற்போதைய நீர் இருப்பு மற்றும் வரத்தினைப் பொறுத்து. தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.