Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆன்லைன் கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலை முயற்சி: சிறுமி உயிரிழப்பு

திருப்பூர்: ஆன்லைன் கடன் தொல்லையால் குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்றதில் சிறுமி உயிரிழந்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரடிவாவி பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் இவரது மனைவி இவர்களுக்கு வின்சிலின் என்ற ஆறு வயது குழந்தை உள்ளது.. கடந்த வாரம் சமூக வலைதளத்தில் கடன் கொடுப்பதாக வந்த லிங்கை ராஜீவ் பதிவிறக்கம் செய்துள்ளார்.

உடனே அவரை தொடர்பு கொண்ட நபர்கள் 2 லட்ச ரூபாய் வரை கடன் வழங்க தயாராக இருப்பதாகவும் அதற்கான ஆவண செலவு இருப்பதாக கூறி 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் பெற்றுள்ளனர். 40 ஆயிரம் ரூபாய் பணத்தை ராஜு தனது நண்பர்களிடம் கடனாக பெற்று ஆவண செலவுக்கு வழங்கி உள்ளார். ஆனால் சமூக வலைதளம் மூலம் தொடர்பு கொண்ட நபர் கூறியபடி லோன் பெற்று தரவில்லை. பிறகு அவரது தொடர்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

மேலும் 40 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்த நண்பர்கள் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இதனால் மீண்டும் மன உளைச்சலுக்கு உள்ளான ராஜு நேற்று முன்தினம் இரவு எலிமருந்தை உட்கொண்டுள்ளார். பிறகு கரடிவாவி பேருந்து நிலையம் அருகே குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தபோது ஆறு வயது சிறுமி வின்சிலின் வாந்தி எடுத்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் 6 வயது சிறுமி வின்சிலின் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலை 6 மணியளவில் உயிர் இழந்தார். இச்சம்பவம் குறித்த காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.