திருப்பூர்: நாகப்பட்டினம் மாவட்டம் விழுத்தமாவடி பகுதியில் கடந்த 13 ஆம் தேதி நடந்த வெட்டோவோம் படத்தினுடைய ஒரு சண்டை காட்சி எடுக்கப்பட்டபோது கார் ஆனது 10 அடி உயரத்தில் பறந்து விழுந்த நிலையில் கார் உள்ளே சிக்கி சண்டை பயற்சியாளர் மோகன்ராஜ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் ப.ரஞ்சித் அதேபோல நீலம் புரொடக்ஷன் மேலாளர் உள்ளிட்ட 4 பேர் மீது கீழ்வேளூர் காவல் நிலையத்தில் அலட்சியமாக செயல்பட்டு உயிர்சேதம் ஏற்படுத்திய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தார்கள். இந்த நிலையில் சண்டை கலைஞர் வினோத் தயாரிப்பு நிர்வாகி ராஜ்குமார் உள்ளிட்ட முன்ஜாமீன் எடுத்த நிலையில் ப.ரஞ்சித் கீழ்வேளூர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
காலை 10 மணிக்கு நீதிமன்றத்துக்கு வருகை தந்தவர் 1 மணி நேரத்துக்கு மேல் காரிலேயே காத்திருந்து சுமார் ஒரு 12 மணி அளவில் நீதிபதி மீனாட்சி முன்னிலையில் கீழ்வேளூர் நீதிமன்றதில் ஆஜராகி உள்ளார்.முன்ஜாமீனுக்கு உரிய ஜாமீன்தாரர் 2 பேரை அவர்கள் இருக்க நிலையில் வழக்கறிஞர்களோடு போராட்டம் நடந்த நிலையில் முன்ஜாமீனுக்குகாக ஜமீன்தார்களை எழுப்பி அவர் உரிய ஆவணங்களை சமர்பித்ததால் பிணையில் அவர் தற்போது விடுவிக்கப்பட்டார்.