பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை kon பலையத்திற்கும் அண்ணா நகருக்கும் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல 13 ஆண்டுகளுக்கு முன்பு lc 94 ரயில்வே கேட் பயன்பாட்டில் இருந்தது. காரைக்குடி மயிலாடுதுறை அகல ரயில்பாதை திட்டத்திற்காக அந்த ரயில்வே கேட் கடந்த 2012 ஆம் ஆண்டு அகற்றபட்டது.
அப்பகுதி மக்களின் தொடர் போராட்டம் காரணமாக சுரங்க பாதை அமைக்க ரயில்வேதுறை ரூ. 2.38 கோடி ஒதுக்கிடும் செய்தும் இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால் தினமும் பள்ளி குழைந்தைகளும் பொதுமக்களும் அபத்தனமுறையில் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்வதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
கடலூர் ரயில் விபத்துக்கு பிறகு ஒரு ஒரு நாளும் அச்சத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். ஆயிரக்கனக்கான பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் தினமும் lc 94 ரயில்வே கேட்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று வருகின்றனர். எனவே ரயில்வே துறையினர் உடனடியாக சுரங்கப்பாதை அமைத்துத்தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்திள்ளனர்.