Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போரை விட நிச்சயம் கொடியது பசிப்பிணி: பட்டினியால் வாடும் காசா மக்களுக்கு விமானத்தின் மூலம் உணவுப் பொருட்கள் விநியோகம்!

காசா: பட்டினியால் வாடும் காசா மக்களுக்கு விமானத்தின் மூலம் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்பட்டன. காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் அங்கு கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. போதிய உணவின்றி பலர் உயிரிழந்துள்ளனர். தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால், போர் முனையால் அழிக்கப்பட்ட இடத்தில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும் இந்த மனித தலைகள் உணவுக்காக அல்லாடுகின்றன. போர் சூழல் ஒரு இனக்குழு மக்களை எத்தகைய நெஞ்சம் பதற வைக்கும் சூழலுக்கு தள்ளி இருக்கிறது என்பதற்கு இந்த காட்சிகளே சாட்சி. பாசியால் பற்றி எரியும் வயிற்றை சற்று குளிர்விக்க, பெரும் கூட்டமாக திரண்டு நிற்கின்றனர் காசா மக்கள்.

பட்டினியால் வாடும் காசா மக்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் உதவிக்கரம் நீட்டியுள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரால் காசாவில் வசிக்கும் பாலஸ்தீன மக்கள் ஒருவேளை உணவின்றி துயரில் வாழும் காட்சிகள் உலகையே உலுக்கி உள்ளன. உணவு பொருள் விநியோகத்தை இஸ்ரேல் தடுப்பதாகவும், உலக நாடுகள் தொடர்ச்சியாக குற்றச்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஐக்கிய அமீரகம் சார்பில் பாலஸ்தீன மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. மத்திய காசா பகுதியில் சரக்கு விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் உணவு பொருட்கள் அடங்கிய பொட்டலங்கள் வீசப்பட்டன. இருப்பினும் தங்களுக்கு இந்த உணவு பொருட்கள் போதாது என தெரிவித்துள்ள பாலஸ்தீன மக்கள் கூடுதல் உணவுகளை வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். முன்னதாக ஜோடார் நாடும் இதே போன்று உணவு பொருட்களை வழங்கி இருந்தது.