Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் தொகுதி வாக்கு எண்ணுமிட முகவர்கள் ஆலோசனை கூட்டம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான தா.மோ.அன்பரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுரைப்படி காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் அடங்கிய ஸ்ரீபெரும்புதூர் - காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணுவதை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணுமிட முகவர்கள் காணொலி காட்சி வாயிலாக கலந்தாலோசனை கூட்டம் வரும் 1.6.2024 காலை 10 மணியளவில் குரோம்பேட்டை ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் எனது தலைமையிலும், திமுக பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் க.செல்வம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற உள்ளது.

வருகிற 4.6.2024ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களின் வாக்கு எண்ணுமிட முகவர்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டிய அவசியம் குறித்தும் வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்களின் முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய செயல்பாடு குறித்தும் சட்ட ஆலோசகரும் மாநிலங்களவை உறுப்பினருமான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கூட்டத்தில் பங்கேற்று காணொலி காட்சி மூலம் விளக்கமளிக்க உள்ளார். எனவே, மாவட்ட நிர்வாகிகள், சட்டமன்ற இந்நாள், முன்னாள் உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.