Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஆப்பிள், கூகுள், ஃபேஸ்புக் நிறுவன பயன்பாட்டாளர்கள் சுமார் 18 கோடி பேரின் கடவுச் சொல் கசிவு!!

டெல்லி : பெரிய அளவிலான ஆன்லைன் கசிவு மூலம் ஆப்பிள், கூகுள், ஃபேஸ்புக் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவன பயன்பாட்டாளர்களின் சுமார் 18 கோடி கடவுச் சொல் அம்பலம் ஆகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சைபர் பாதுகாப்பு நிபுணர் Jeremiah Fowler வெளியிட்டுள்ள தகவலில், ஆப்பிள், கூகுள், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற முக்கிய தொழில்நுட்ப தளங்களுடன் இணைக்கப்பட்ட 18 கோடிக்கும் அதிகமான கடவுச் சொற்கள், ஒரு பெரிய தரவு கசிவு மூலம் அம்பலம் ஆகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மின்னஞ்சல் முகவரி, ஆன்லைன் உள் நுழைவு சான்றுகள் மற்றும் அங்கீகார இணைப்புகள் அடங்கிய ஒரு பாதுகாப்பற்ற ஆன்லைன் தரவு தளத்தை கண்டுபிடித்ததாக கூறியுள்ளJeremiah Fowler, கடவு சொற்களுக்கு அப்பாற்பட்ட வங்கிகள், நிதி நிறுவனங்கள், சுகாதார சேவைகள் மற்றும் அரசாங்க தளங்களில் உள் நுழைவு விவரங்களும் அதில் அடங்கி இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். கணினியில் எளிதாக தளத்தில் நுழைய Save Password முறையை சேமிக்கப்பட்டுள்ளவர்களின் தரவுகளே அம்பலம் ஆகி உள்ளதால், சைபர் கிரைம் குற்றவாளிகள் அதனை எளிதில் அணுகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். எனவே கடவுச் சொல்லை அடிக்கடி மாற்றுவதன் மூலமும் Multi Factor Authentication மூலமும் தரவுகளை பாதுகாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.