Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்: தேவஸ்தானம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு காப்பீடு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். சபரிமலையில் மேம்படுத்த வேண்டிய அடிப்படை வசதிகள், ஐய்யப்ப பக்தர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் சபரிமலை தரிசனத்திற்கு வரும் ஐய்யப்ப பக்தர்களுக்கு காப்பீடு திட்டத்தை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கூறியதாவது: சபரிமலை தரிசனத்திற்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு சபரிமலை சுற்றுவட்டார பகுதிகளில் ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் புதிதாக காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் ஐய்யப்ப பக்தர்களிடம் காப்பீடுக்காக ஒருவருக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். இது தொடர்பாக காப்பீடு நிறுவனங்களுடன் விரைவில் ஒப்பந்தம் போடப்பட்டு இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். சீசன் காலங்களில் தினசரி 80 ஆயிரம் பக்தர்களுக்கும், மற்ற நாட்களில் 50 ஆயிரம் பேருக்கும் தரிசன அனுமதி வழங்கி வரும் நிலையில் புதிய காப்பீடு திட்டம் ஐய்யப்ப பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.