Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ராமேஸ்வரத்தில் அடுத்த சம்பவம் நள்ளிரவில் சிறுமியை கடத்தி செல்ல முயற்சி?

rameswaram, girl childராமேஸ்வரம் : தூய்மை பணியாளர்கள் தங்கும் கூடாரத்திற்குள் நள்ளிரவில் மர்ம நபர் புகுந்ததால் ராமேஸ்வரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராமேஸ்வரம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் நகர்ப்புறம் மற்றும் தெருக்களில் தூய்மை பணிகளை மேற்கொள்ள நகராட்சி துப்பரவு பணியாளர்கள் மற்றும் தனியார் ஒப்பந்த பணியாளர்கள் என இரு பிரிவுகளாக பணி செய்து வருகின்றனர்.

இதில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் வட மாநிலத்தை சேர்ந்தவர்களை தூய்மை பணிக்கு ஈடுபடுத்தி வருகின்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் மின்வாரிய அலுவலகம் பின்புறமும், அக்னி தீர்த்தக் கடற்கரையிலும் இருபிரிவுகளாக குடும்பத்துடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரை பகுதியில் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்கும் கூடாரத்தில் மத்திய பிரதேச மாநிலம் இந்தோர் பகுதியை சேர்ந்த வட மாநிலத்தவர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

இந்த கூடாரத்திற்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் பின்புறம் வழியாக குதித்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்த பெண்கள் அவரை பிடித்து ஒப்பந்ததாரருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனிடையே அந்த மர்ம நபர் அவர்களை தள்ளிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

உள்ளே சிறுமிகள் மற்றும் குழந்தைகள் உள்ளதால் கடத்துவதற்கு அல்லது தவறான பாலியல் நடவடிக்கையில் ஈடுபடும் நோக்கத்தில் மர்ம நபர் வந்திருக்கலாம் கூறப்படுகிறது. இதுகுறித்து தனியார் ஒப்பந்த நிறுவன பொறுப்பாளர் கோபி புகாரில், ராமேஸ்வரம் கோயில் காவல்நிலைய போலீசார் விசாரிக்கின்றனர். அக்னி தீர்த்த கரையில் தனியார் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா பொருத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது, இச்சம்பவம் அப்பகுதியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.