ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பிப்லோடியில் ஆரம்பப் பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததில் 4 சிறுமிகள் உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜிலாவரை அடுத்த பிப்லோடி பகுதியில் அரசுப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம் போல் காலை பள்ளி துவங்கியது. அப்போது பள்ளியின் மேல் கூரை இடிந்து விழுந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் கிராம பொது மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், படுகாயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் மாணவர்கள் உள்ளிட்ட மேலும் 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் அவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மனோகர் தானாவில் உள்ள பிப்லோடி அரசுப் பள்ளியில் காலை சுமார் 8.30 மணியளவில் இந்த கோர விபத்து அரங்கேறியுள்ளது.