சென்னை: பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணி பெறுவதால் 21 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் மிகவும் முக்கியமான போக்குவரத்துகளில் ஒன்றான மின்சார ரயிலை தினசரி லட்சகணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மின்சார ரயிலானது ரத்து செய்யப்படுவது வழக்கம் ஆகும்.
இந்த ரயில்களை வேலைக்கு செல்வோர், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் இந்த மின்சார ரயில்களை பயன்படுத்தி வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரங்களில் இந்த மின்சார ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதும்.
அதன்படி பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 21 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும், பிறகு மே 17ம் தேதியும் 21 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை- கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்ட்ரல்-பொன்னேரி, மீஞ்சூர், எண்ணூர் இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.