Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டின் பல முற்போக்கு திட்டங்கள், சட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த பனகல் அரசரின் புகழை போற்றுவோம்: அமைச்சர் உதயநிதி

சென்னை: தனது ஆட்சி காலத்தில் Communal G.O. வை வெளியிட்டு சமூக நீதிக்கான அரணை எழுப்பியவர் பனகல் அரசர் என சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் பனகல் அரசரின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாட்டின் பல முற்போக்கு திட்டங்கள், சட்டங்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த பனகல் அரசரின் புகழை போற்றுவோம் என தனது சமுகவலைதள பதிவில் கூறியுள்ளார்.

அமைச்சர் உதயநிதிஸ்டாலின் சமுக வலைதளப் பதிவில்:

நீதிக்கட்சியின் தளகர்த்தர்களில் ஒருவர் - சென்னை மாகாண முன்னாள் முதலமைச்சர் பனகல் அரசரின் பிறந்த நாள் இன்று. தனது ஆட்சி காலத்தில், Communal GO-வை வெளியிட்டு சமூக நீதிக்கான அரணை எழுப்பியவர், மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் அவசியமில்லை என மாபெரும் கல்விப்புரட்சியை செய்தவர், அறநிலையத்துறை சட்டத்தை கொண்டு வந்து வழிபாட்டு உரிமையை காத்தவர், அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தவர்.

பனகல் அரசர் பற்றிய பள்ளிப் பாடத்தை படித்தே முத்தமிழறிஞர் கலைஞர் சுயமரியாதைபாதையை தேர்வு செய்தது வரலாறு. தமிழ்நாட்டின் பல முற்போக்கு திட்டங்களுக்கும் - சட்டங்களுக்கும் முன்னோடியாக திகழ்ந்த பனகல் அரசரின் புகழைப் போற்றுவோம். என அமைச்சர் உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.