விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் குகுர்குளம் கிராமத்தை சேர்ந்த முத்துக்கருப்பன் என்பாரின் மனைவி ஐஸ்வர்யா நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு நேற்று மாலை திடிர் என பிரசவவலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரது கணவர் 108 அம்புலன்ஸ் உதவி அணுகி உள்ளார் சிறிது நேரத்தில் திருச்சுழி அரசு மருத்துவமனையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் விரைந்து சென்று பிரசவவலியில் துடித்து கொண்டிருந்த ஐஸ்வர்யாவை ஏற்றிக்கொண்டு விருதுநகர் அரசு மருத்துவமனை கல்லுரி மருத்துவமனைக்கு விரைந்து கொண்டிருந்தது.
ஆனல் பிரசவவலி அதிகரித்து ஐஸ்வர்யாவிற்கு ஆம்புலன்சிலேயே ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் சேயும் விருதுநகர் அரசு கல்லுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாயும் சேயும் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.