போர்ச்சுகல், பல்கோரிய, ஸ்பெயினை அச்சுறுத்தும் காட்டுத் தீ: தீயை அணைக்கும் பணியில் ராணுவ வீரர்கள் தீவிரம்
லிஸ்பன்: போர்ச்சுகல், பல்கேரியா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் உள்ள மலை தொடரில் பற்றி எரியும் காட்டுத் தீயினால் ஆயிரக்கணக்காக வனப்பகுதிகள் தீயில் கருகியுள்ளன. போர்ச்சுகல்லில் அரோகா மலை தொடரில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க ராணுவ ஹெலிகாப்டர் போராடி வருகின்றன. கேசரஸ் கிராமத்தில் அருகே வனப்பகுதியில் பற்றிய காட்டுத் தீ தொடர்ந்து பரவி வரும் நிலையில் 500க்கு மேற்பட்ட மீட்பு படையினர் தீயணையை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மலையை ஒட்டியுள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். பல்கேரியா நாட்டின் பிளாகோவ்கிராட் மலை தொடரில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீயை அணைக்க வானிலை சாதகமா இல்லாததால் தீயை அணைப்பதில் சவால் ஏட்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. மலை தொடரில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வரும் நிலையில், ராணுவ விமானம் மூலம் தண்ணீர் வீழ்ச்சி அடிக்கப்படுகிறது.
ஸ்பெயின் நாட்டின் கேசரஸ் மலை தொடரில் காட்டுத்தீ அருகில் உள்ள கிராமங்களிலும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் 200க்கும் மேற்பட்ட குடுபத்தினரை அந்நாட்டு ராணுவம் மீட்டுள்ளனர். மீட்பு பணியில் 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் களம் இறங்கி அடர்வனத்துக்குள் சென்று தண்ணீர் பீய்ச்சி அடித்து போராடி வருகின்றனர். காட்டுத்தீ பரவியதற்கு காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட வெப்பம் நிலை உயர்வே காரணம் என தகவல் வெளியாகியுள்ளது.