Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' திரைப்படத்தில் நடித்த நடிகர் டமாயோ பெர்ரி உயிரிழப்பு

'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' திரைப்படத்தில் நடித்தவர் 49 வயதான டமாயோ பெர்ரி. இப்படத்தின் மூலம் டமாயோ உலகம் முழுவதும் பிரபலமடைந்தார். டமாயோ பெர்ரி 1975 இல் பிறந்தார். ஓஹுவின் கிழக்குப் பகுதியில் வளர்ந்தார், வடக்கு கடற்கரையில் ஒரு தொழில்முறை சர்ஃபிங் பயிற்றுவிப்பாளராகவும், உயிர்காப்பாளராகவும் பணியாற்றினார்.

அவர் 12 வயதில் சர்ஃபிங் செய்யத் தொடங்கினார். பின்னர் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினர். இந்நிலையில் நேற்று(ஜூன் 23) பிற்பகல் ஹவாயில் ஓஹூவில் கோட் தீவு அருகே சர்ஃபிங் செய்து கொண்டிருக்கும்போது கடலில் இருந்த சுறா டமாயோவை தாக்கியது. இந்த சம்பவத்தை கண்ட நபர் உடனடியாக மீட்புக்குழுவிற்கு தகவல் அளித்தார்.

தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு விரைந்த மீட்புக்குழுவினர் டமாயோவை கடற்கரைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் டமாயோ பெர்ரியின் உயிர் பிரிந்துவிட்டது. இதையடுத்து டமாயோவை சுறா தாக்கியதையடுத்து நீர் பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியில் சுறா எச்சரிக்கைகளை வெளியிட்டனர்.