Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாட்டில் மார்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அதிக வெப்பத்தால் 7,000 பேர் பாதிப்பு: 14 பேர் உயிரிழப்பு

டெல்லி: நாட்டில் மார்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அதிக வெப்பத்தால் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மே மாதத்தில் 1962 பேர் வெப்ப அலையால் பாதிக்கப்பட்டதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்த கோடை காலம் இந்தியாவின் வானிலை வரலாற்றில் மிக நீண்ட வெப்ப அலை காலங்களைக் கண்டுள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் வடமேற்கு பகுதிளில் 45-50°C வெப்பநிலை சில இடங்களில் 50°C க்கும் அதிகமாக பதிவாகியுள்ளது. இதே காலகட்டத்தில் பல தீ விபத்துகள் துயரத்தை அதிகரித்தன, இது நாட்டின் சுகாதாரம் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பை கடுமையாக பாதித்தது.

உத்தரகண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயுடன் தொடங்கியது. மருத்துவமனைகளில் அடிக்கடி தீ விபத்துக்கள் மற்றும் உயரமான கட்டிடங்கள், துரதிர்ஷ்டவசமாக உயிர் இழப்புகளுக்கு வழிவகுத்தன. குளிரூட்டும் கருவிகளை இயக்க மின்சாரத்திற்கான தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. மேலும் டெல்லியில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குடிநீர் நெருக்கடி நிலவியது.

இந்த நிலையில் நாட்டில் மார்ச் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் அதிக வெப்பத்தால் 7,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 14 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.