சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு வருகின்ற 17.08.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும் ஏன் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியான அறிக்கையில்;
"பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் உத்தரவுக்கினங்க பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழு வருகின்ற 17.08.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று திண்டிவனம் TO புதுவைக்கு செல்லும் வழியில் பட்டானூர் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் காலை 10.00 மணியளவில் நடைபெறும் என்பதை தெரியப்படுத்துகிறோம்.
இந்த பொதுக்குழுவில் மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் தவறாது கலந்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.