Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பனை தொழிலாளர்களின் பாதுகாவலராக தமிழக அரசு திகழ்கிறது: நல வாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் அறிக்கை

சென்னை: சமத்துவ மக்கள் கழக தலைவ்ர எர்ணாவூர் நாராயணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெரிய தாழையில் நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பில் கள் தடையை நீக்க வலியுறுத்தி பனைமரத்திலிருந்து கள் இறக்கிய போராட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பனை மரத்தில் ஏறி கள் இறக்கி அதனை பொதுமக்களுக்கும் நிர்வாகிகளுக்கும் ஊற்றி கொடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு பனைமரத் தொழிலாளர்கள் வாரியம் சார்பாக ஒரு கோடி பனை விதைகள் விதைத்து உலக சாதனை பட்டியலில் இடம் பெற்றுள்ளோம். அதன் பிறகு இன்று தமிழக அரசு பனைத் தொழிலாளர்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் அறிவித்து அவர்கள் பயனடைந்து வருகிறார்கள். தேர்தல் நெருங்கும் சமயம் சீமான் அரசியல் ஆதாரம் தேடுகிறார்.

அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பனைமர தொழிலாளர்கள் நலனுக்காக அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மீண்டும் பனை நல வாரியம் அமைத்து பனைத் தொழிலாளர்கள் பாதுகாவலராக தமிழக அரசு இன்று திகழ்ந்து வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.