Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆரஞ்ச் தொப்பி பெருமைதான்...ஆனால் அதைவிட வெற்றி முக்கியம்: விராட் கோஹ்லி நெகிழ்ச்சி

மும்பை : 2024 ஐபிஎல் டி20 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரும் முன்னாள் கேப்டனுமான விராட் கோஹ்லி 15 போட்டிகளில் ஆடி 5 அரைசதம் மற்றும் ஒரு சதம் உள்பட 741 ரன்களை குவித்து, நடப்பு சீசனில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன் ஆரஞ்ச் தொப்பியையும் வென்று அசத்தினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த சீசனுக்கான ஆரஞ்சு தொப்பியை பெற்றதில் மிகவும் பெருமையடைகிறேன். சீசன் முழுவதும் எனது அணிக்காக நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விதத்தில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், ஆனால் இதனைவிட ஒவ்வொரு போட்டியிலும் எங்கள் அணி வெற்றிபெற வேண்டும் என்பதே மிக முக்கியமானதாகும். ஐபிஎல்லின் 2025 சீசனிலும் இதைப் பிரதிபலிக்க நான் விரும்புகிறேன். உங்கள் ஆதரவிற்கு அனைவருக்கும் நன்றி” என்றார்.