Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாகை பைபாஸ் சாலையில் அரசுப் பேருந்து மோதியதில் பள்ளி மாணவி உயிரிழப்பு

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் குருக்கத்தி பைபாஸ் சாலையில் அரசுப் பேருந்து மோதியதில், இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார். உடன் இருந்த மாணவியின் தம்பி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தம்பி உடன் ஸ்கூட்டியில் பள்ளிக்குச் செல்லும் போது விபத்து நடந்துள்ளது. உரிய தடுப்பு அமைக்காததே விபத்துக்கு காரணம் என அப்பகுதியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் மேலஇழுப்புர் பகுதியை சேர்ந்தவர் ராஜா இவரது மகள் அஸ்வினி திருவாரில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அஸ்வினி தனது சித்தப்பா மகன் அவினாஷ் உடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு கூட்டி சென்றுள்ளார்.

இந்நிலையில் குருக்கத்தி பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருக்கும் போது நாகர்கோவிலில் இருந்து வேளாங்கன்னி சென்ற SETC அரசு பேருந்து இருசக்கர வாகனம் மீது கட்டுப்பாட்டை இழந்து மோதியது. இருசக்கர வாகனம் அரசு பேருந்துக்கு அடியில் சிக்கியது. இந்த விபத்தினால் அஸ்வினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது தம்பி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு அவரது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் மாணவியின் உயிரிழப்புக்கு நீதி கேட்டு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நாகை - திருவாரூர் கிழக்கு கடற்கரை சாலை நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலை ஆகிய இரண்டு இடங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சாலை மறியலால் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.