Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

துபாயில் முத்தமிழ் சங்கம் சார்பில் தமிழக வர்த்தகர்கள் சந்திப்பு

துபாய்: முத்தமிழ் சங்க வர்த்தகர்கள் சந்திப்பு அறிமுக விழா 29 June 2024 மாலை 6 மணி அளவில் சேர்மன் ராம சந்திரன், தலைவர் ஷா மற்றும் பொது செயலாளர் சுரேஷ் குமார் முன்னிலையில் வெகு விமரிசையாக நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக KRG குரூப் கண்ணன் ரவி, DOHA bank CEO Dr. சீதா ராமன், Bin Saifan குரூப் CEO சந்திர சேகரன் மற்றும் Capital இன்ஜினியரிங் Consultancy Balaskanthan Raghunathan ஆகியோர் கலந்து கொண்டு விழாவில் சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் மேலும் Dr. Mohideen, துணை செயலாளர் சக்கரவர்த்தி, iman பொது செயலாளர் ஹமீத் யாசீன்,

இர்ஷாத், ரமேஷ், சின்னா, தங்க துரை, samyutha Bhavan ராம மூர்த்தி, மதுரை பிரியாணி பாலா, ஆடிட்டர் யுக மூர்த்தி மற்றும் துபாய் உள்ள 90 க்கும் அதிகமான தொழில் அதிபர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து தந்தார்கள். பொது செயலாளர் சுரேஷ் குமார் மேலும் கூறுகையில் முத்தமிழ் சங்கம் வர்த்தகர்கள் சந்திப்பு கலந்துரையாடல் எல்லா மாதமும் சிறப்பாக முன்னெடுத்து அதன் மூலம் தொழில் அதிபர்களுக்கு மற்றும் நமது சமுதாய மக்களுக்கும் பயன் படும் வகையில் நடத்த படும் என்று கூறினார். கவுரவ செயலாளர் மணி அரசு நன்றி உரை வழங்க விழா நிறைவு செய்ய பெற்றது.