டெல்லி: மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் 12 பேர் விடுதலைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மும்பை ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட 12 பேரையும் கடந்த 21ம் தேதி விடுதலை செய்து மும்பை உயர்நீதிமன்றம் விடுவித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக மகாராஷ்டிர அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தது.அந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.என். சுந்தரேஷ் , என்.கோபி சாஸ்திரி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
முதலில் மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டி ஜெனரல் துஷாந்த் மேத்தா இந்த தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரினார். இருப்பினும் இந்த வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டதால் மீண்டும் அவர்களை சிறையில் அனுப்புவதற்கான கேள்வி எழவில்லை என்பதால். இந்த வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை பிற மோச வழக்குகளில் முன்னுதாரணமாக கொள்ளக்கூடாது என நீதிபதிகள் தெரிவித்ததுடன். இந்த விவகாரத்தில் எழும் வழக்குகளுக்கு பதில் அளிக்கும் வகையில் 12 பேருக்கும் நோட்டீஸ் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.