Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெளிநாட்டில் வசிக்கும் நபர்களின் வங்கி கணக்கில் இருந்து பணபரிமாற்றம் மூலம் ரூ.4.37 மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

ரவி, வ/64, தி.நகர், சென்னை என்பவர் கடந்த 30.04.2025 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளரிடம் கொடுத்த புகாரில், வெளிநாட்டில் வசித்து வரும் விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன் என்பவர்களின் வங்கி கணக்குகளை பொது அதிகாரத்தின் அடிப்படையில் மேற்படி ரவி பராமரித்து வருவதாகவும், திரு ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன் ஆகியோர்கள் Induslnd Bank, Anna Nagar Branch ல் வங்கி கணக்கில் வைத்திருப்பதாகவும், அதில் Alamu Memorial Trust ல் 3 Fixed Deposit என மொத்தம் Rs.2,64,00,000/-ம், மற்றொரு வங்கி கணக்கில் 6 Fixed Deposit Rs. 1,40,70,000/-ம் செலுத்தியுள்ளனர்.

மேற்கண்ட FD கணக்குகள் அனைத்தும், வங்கி கணக்கின் உரிமையாளர் விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன் அனுமதியின்றி Pre Mature Closing செய்து, அவர்களது Cheque கள், கையொப்பத்தை போலியாக பயன்படுத்தி, பல்வேறு வங்கி கணக்குகளுக்கு மொத்தம் Rs. 4,36,70,000/- பணப்பரிவர்த்தனை செய்து மோசடி செய்துள்ளதாக ரவி என்பவர் கொடுத்த புகாரின் மீது கடந்த 21.05.2025 ம் தேதி மத்திய குற்றப்பிரிவு, வங்கி மோசடி புலனாய்வு பிரிவில் வழக்குபதிவு செய்து புலன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், காவல் கூடுதல் ஆணையாளர் (மத்திய குற்றப்பிரிவு) A.ராதிகா தலைமையில், மத்திய குற்றப்பிரிவு வங்கிமோசடி புலனாய்வு பிரிவு காவல் குழுவினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், Induslnd Bank, Anna Nagar Branch ல் விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன் என்பவர்களின் வங்கி கணக்கில் Rs. 4,36,70,000/- இருப்பதை, அந்த வங்கியின் மேலாளராக பணிபுரிந்த எதிரி 2 மஞ்சுளா தியாகராஜன் என்பவர் அறிந்து கொண்டு, சட்டவிரோதமாக சுயலாபம் அடையவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தில், விஜய் ஜானகிராமன் என்பவர் நம்பிக்கையின்பேரில் கொடுத்த Cheque களை மோசடியாக பயன்படுத்தி எதிரி 3 நாகேஷ்வரன் மற்றும் எதிரி 4 ஆறுமுக குமார் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து எதிரி 3 நாகேஷ்வரன் வங்கி கணக்கு, அவரது குடும்ப உறுப்பினர்கள் வங்கி கணக்குகளுக்கு, வாதியின் வங்கி கணக்கிலிருந்து ரூ.72,00,000/- லட்சம் மோசடியாக பணத்தை மாற்றி அபகரித்த குற்றத்திற்காக, காவல்குழுவினர், தீவிர தேடுதலில் ஈடுபட்டு, எதிரி-3 நாகேஷ்வரன், வ/52, அயனாவரம், சென்னை என்பவரை கடந்த 26.06.2025 அன்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

மேலும், வங்கி மேலாளரான எதிரி 2 மஞ்சுளாவின் மோசடிக்கு கூட்டு சேர்ந்த எதிரி 4 ஆறுமுககுமாரின் வங்கி கணக்கிற்கு, வாதியின் வங்கி கணக்கிலிருந்து மொத்தம் Rs.1,64,14,250/- ரூபாயை மோசடியாக பணபரிமாற்றம் செய்து, பணத்தை அபகரித்த குற்றத்திற்காக எதிரி-4 ஆறுமுக குமார், வ/63, தூத்துக்குடி என்பவரை நேற்று முன்தினம் (04.07.2025) கைது செய்து, நீதிமன்றத்தில், ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேற்படி குற்ற சம்பவத்தில் தொடர்புடைய எதிரி மஞ்சுளா என்ற தலைமறைவு எதிரியை பிடிக்க காவல்குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.