Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உண்மையில் மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே : மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம்

சென்னை: உண்மையில் மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார். அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "128 ஆண்டு நடைமுறையில் இருந்த பதிவுத் தபால் சேவை செப்டம்பர் முதல் நிறுத்தம். விரைவுத் தபால் சேவையுடன் இணைப்பு என அஞ்சல்துறை அறிவிப்பு.

பதிவுத் தபால் சேவை குறைந்த பட்ச கட்டணம் ரூ 26.

விரைவுத் தபால் எனில் ரூ 41

பதிவுத் தபால் ஒப்புகை கட்டணம் ரூ 3. விரைவுத் தபாலில் ரூ 10

பதிவுத் தபால் நபருக்கே போய்ச் சேரும். விரைவுத் தபால் முகவரிக்கு போய்ச் சேரும்.

பதிவுத் தபால் எடை கூடினால் மட்டுமே கட்டணம் கூடும். தேசம் முழுக்க எவ்வளவு தூரம் என்றாலும் ஒரே கட்டணம். விரைவுத் தபால் எடை கூடினாலும் கூடும். தூரம் கூடினாலும் கூடும்.

எல்லாம் எதற்கு? மக்களை தனியார் கூரியர் நிறுவனங்களை நோக்கி தள்ளுகிற ஏற்பாடு.

"தக் சேவா; ஜன் சேவா" என்பது அஞ்சல் துறையின் முழக்கம். அதாவது அஞ்சல் சேவை மக்கள் சேவையாம்.

உண்மையில் "மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.