தேனி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மேகமலை அருவியில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. நேற்று இரவு முதல் மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் மேகமலைக்கு மேற்புற உள்ள கேரளா மாநில எல்லை மற்றும் வனப்பகுதிகளில் கனமழை பெய்து வந்தது. இந்த மழையால் மேகமலை அருவியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆண்டிபட்டி அருகில் உள்ள கோம்பைத்தொழு வனப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியில் தண்ணீர் அபாய அளவை தாண்டி விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு மேகமலை வனத்துறை தடை விதித்துள்ளது. அருவியில் நீர்வரத்து சீராகும் வரை இந்த தடை தொடரும் என மேகமலை வனத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மேகமலை அருவி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.