Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 284-ஆவது குழுமக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை: சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் 284- ஆவது குழுமக் கூட்டம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி இன்று (25.07.2025) சென்னை, எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் அமைந்துள்ள சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 284-ஆவது குழுமக் கூட்டம் நடைபெற்றது.

இக்குழுமக் கூட்டத்தில் சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசீலிப்பது குறித்தும், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், சட்டமன்ற பேரவையில் அறிவித்த அறிவிப்புகளின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, அனைத்து திட்டங்களையும் விரைவில், மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவதற்குண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இக்குழுமக் கூட்டத்தில் மேயர் பிரியா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், நிதித்துறை சிறப்பு செயலாளர் பிரசாந்த் மு.வடநெரே, நகர் ஊரமைப்பு இயக்கக இயக்குநர் பா.கணேசன் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி. சிங், குழும உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.