Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியம்

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. மருத்துவப் படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்குகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 72,743 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர ஏற்கெனவே போலி ஆவணங்கள் கொடுத்த 20 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மேலும் 5 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அரசு ஒதுக்கீட்டு மருத்துவ இடங்களில் சேர 43,315 பேர் விண்ணப்பித்ததில் 39,853 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன. மருத்துவ படிப்பில் சேர 7.5% இட ஒதுக்கீட்டில் 4,281 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 4,062 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் 4,281 பேரிடமும், விளையாட்டு வீரர்கள் 477 பேரிடமும், முன்னாள் ராணுவத்தினர் வாரிசு 642 பேரிடமும் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 148 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் 6,600. அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு பிடிஎஸ் இடங்கள் 1,583 ஆகும். 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் எம்பிபிஎஸ் இடங்கள் 495, பிடிஎஸ் இடங்கள் 119 நிரப்படவுள்ளன. நீட் தேர்வில் 665 மதிப்பெண் பெற்றுள்ள நெல்லை மாணவர் சூர்யநாராயணன் மருத்துவ தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். சேலம் மாணவர் அபினேஷ் நாகராஜ் 2-ம் இடமும், சேலத்தைச் சேர்ந்த பிரதீப் விஜயராஜா தரவரிசைப் பட்டியலில் 3ம் இடம் பிடித்துள்ளனர்.