Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மெரினா கடற்கரையில் நீலக்கொடி சான்றுக்கான மேம்பாட்டு பணி நிறைவு

சென்னை: மெரினா கடற்கரையில் நீல கொடி கடற்கரை சான்றிற்கான மேம்பாட்டு பணிகளை சென்னை மாநகராட்சி நிறைவு செய்துள்ளது. நீல கொடி கடற்கரை திட்டம் நன்னீர் மற்றும் கடல் பகுதிகளில் நிலத்தின் தன்மையின் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கான ஒரு சர்வதேச முயற்சி. சுற்றுச்சூழல் கல்வியின் அடிப்படையில் நிறுவனம் மூலம் நடத்தப்படுகிறது. 1985ல் பிரான்சில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் உலக அளவில் விரிவடைந்துள்ளது. இந்தியாவில் இது காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் கடற்கரை சுற்றுச்சூழல் மற்றும் அழகியல் மேலாண்மை சேவைகளின் கீழ் செயல்படுகிறது.

இந்த திட்டமானது தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம், கோவளம் கடற்கரையில் நீல கொடி கடற்கரை சான்றிதழ் பெற்ற முதற்கடற்காரையாக திகழ்கிறது. இத்திட்டதை தமிழ்நாட்டில் உள்ள மற்ற கடற்கரைகளில் விரிவுபடுத்தும் நோக்கில் சென்னை, கடலூர், ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி போன்ற கடற்கரைகளில் பணிகள் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் அரசானை எண்.160, நாள் 19.9.2024-ல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையை சர்வதேச தரத்தில் மேம்படுத்தும் நோக்கில் நீலவண்ண கொடி சான்றிதழ் பெறும் நோக்கில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பணிகளை சென்னை மாநகராட்சி நிறைவு செய்துள்ளது. நீலக் கொடி கடற்கரை திட்டத்தின் முக்கிய அம்சங்கள்; நீரின் தரம், சுற்றுச்சூழல் மேலாண்மை, சுற்றுச்சூழல் கல்வி, பாதுகாப்பு அம்சங்கள் இந்த திட்டம் நான்கு முக்கிய பங்குகளில் உயர்ந்த தரங்களை நிலை நாட்டுகிறது.

* நீல கொடி கடற்கரை சான்றிதழின் நன்மைகள்:

சுற்றுலா மேம்பாட்டிற்கு: அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கிறது. இது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது.

நிலத்தின் தன்மை மேம்படுகிறது: உள்ளூர் மீன்பிடி சமூகங்களை ஆதரித்து கடற்கரை இடங்களை பாதுகாக்க ஊக்குவிக்கப்படுகிறது.

ஆரோக்கியமான நன்மைகள்: இதன் மூலம் மக்கள் ஆரோக்கிய வாழ்வை வளப்படுத்துகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழல் மக்களை மகிழ்விக்க உதவுகிறது.

புகழ்: சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தகுந்த இடங்களை சந்தைப்படுத்த உதவுகிறது. அதற்கான சுற்றுச்சூழல் தேர்ந்தெடுக்க உதவுகிறது.நீலக் கொடி என்பது சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா துறைகளை ஒருங்கிணைக்க உதவும் ஒரு மதிப்புமிக்க சுற்றுச்சூழல் சின்னமாக வளர்ந்துள்ளது.

* திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவுள்ள பணிகள்:

சுற்றுச்சூழலுக்கு உகந்த பாதை, கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் நிழலான இருக்கை வசதிகள்.

குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைத்தல்.

உயிர்காக்கும் கோபுரங்கள், காட்சி பதிவு கண்காணிப்பு மற்றும் முதலுதவி கியோஸ்க்குகள் அமைத்தல்.

மாற்றுத்திறனாளிகள் எளிதில் செல்ல சாய்வுதளங்கள் அமைத்தல்.

சுய புகைப்படங்கள் எடுக்கும் இடம் மற்றும் முகப்பு நுழைவாயில் வளைவு அமைத்தல்.

இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பை சீர்குலைக்காமல் கடலோர சூழலுடன் ஒருங்கிணைக்கப்பட்ட வசதிகளுடன், நிலையான கடற்கரை மேம்பாட்டிற்கான தேசிய அளவுகோலை அமைக்க இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டம் ரூ.7.31 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது, இதனை தொடர்ந்து செயல்பாடு மற்றும் பராமரிப்பு பணிகள், இப்பணியை மேற்கொண்ட ஒப்பந்ததரார் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. நீலக் கொடி சான்றளிக்கப்பட்ட பின் மெரினா கடற்கரை நிலையான சுற்றுலாவிற்கு ஒரு முன்மாதிரியாக திகழும்.