Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவாவில் 77 அடி உயர ராமர் சிலை: பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்

கோவா: கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள  சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் ராமரின் 77 அடி வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலை நாளை புனிதமாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான பூஜைகள் இன்று காலை மத் வித்யாதீஷ் தீர்த்த சுவாமியால் துவங்கி நடைபெற்று வருகிறது. நாளை பிற்பகல், பிரதமர் மோடி, சிலையை திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து பக்தர்கள் மற்றும் விருந்தினர்களுக்கான தரிசனம் மற்றும் சபா காரியக்ரமம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரதீப் ஜி. பாய், மடத் துறவி வித்யாதீஷ் தீர்த்த் பாத் வேடர் கூறுகையில், ‘மடத்தின் 550 வது ஆண்டு விழாவை முன்னிட்டு, 77 அடி உயர ராமர் சிலை திறக்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது’ என்றார்.