மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் வரும் 19ம் தேதி விடுமுறை அறிவிப்பு
சென்னை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் வரும் 19ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகளில் ஏப்.19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு நாளில் அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.
அதன்படி விடுமுறையை வழங்காத தனியார் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்க ஊழியர்களுக்கும் வரும் 19ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான வெளியான அறிக்கையில்; "எதிர்வரும் 19.04.2024 அன்று நடைபெறும் இந்திய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கம் உழியர்களுக்கும் அன்று 19.04.2024 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது" என அறிவிக்கப்பட்டுள்ளது.