Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தைலாபுரம் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தியது யார் என்பது 2 நாளில் தெரியும்: ராமதாஸ் பேட்டி

விழுப்புரம்: தைலாபுரம் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தியது யார் என்பது 2 நாளில் தெரியும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் விருத்தாசலத்தில் நடைபெற்ற பாமக மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற ராமதாஸ், கூட்டத்துக்கு பின்னா் செய்தியாளர்களுடன் பேசுகையில், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரம் தோட்டத்திலுள்ள எனது வீட்டில் இருக்கையின் அருகே லண்டனில் இருந்து வாங்கப்பட்ட விலை உயா்ந்த ஒட்டுக் கேட்கும் கருவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இதை யாா் வைத்தாா்கள்?, எதற்காக வைத்தாா்கள்? என்பது தொடா்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா். இந்தநிலையில், இந்த புகார் குறித்து தைலாபுரம் வீட்டிற்குச் சென்றுள்ள தனிப்படை போலீஸார், தங்களது முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது; தைலாபுரம் வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தியது யார் என்பது 2 நாளில் தெரியும் என்றார். இதையடுத்து வன்னியர் சங்க மகளிர் மாநாட்டு துண்டு பிரசுரத்தில் அன்புமணி பெயர், படம் இல்லை என்று செய்தியாளர்கள் கேள்விக்கு, அன்புமணி பெயர், படம் வரும், வரலாம் என அவர் பதில் அளித்தார். மேலும், மகளிர் மாநாட்டுக்கு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படும், அவர் வரலாம் வராமலும் போகலாம் என கூறினார். பாமக தேர்தல் களத்தில்தான் இருக்கிறது திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதையடுத்து, "உங்களுடன் ஸ்டாலின்" திட்டம் நல்ல திட்டம் என வரவேற்பு அளித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டுகளை விட மழைப்பொழிவு நடப்பாண்டு அதிகம் என்கிறது தகவல் வெளியாகியுள்ளதால், ஏரி, மதகுகளை தமிழ்நாடு அரசு சீரமைக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றின் வடிநில கட்டமைப்புகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அதனை சீரமைக்க வேண்டும். திருவள்ளூர், குமரி மாவட்டங்களிலும் பல இடங்களில் மதகுகள் சீரமைக்கப்பட வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், பருவ மழை தொடங்கும் முன்பு செய்துவிட்டால் பெரிய இழப்பில் இருந்து தப்பிக்கலாம் என அவர் கூறினார்.