புதுக்கோட்டை அருகே மண்ணெண்ணெய் வாங்க குவிந்த ஏராளமான குடும்ப அட்டைதாரர்கள்: கடை திறந்தவுடன் வாடிக்கையாளர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாநகராட்சி உட்பட கிளை இரண்டாம் வீதி அருகாமையில் சக்கரவாதி ஐயங்கார் சந்து பகுதியில் அரசு மண்ணெண்ணெய் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மண்ணெண்ணெய் கடையில் குடும்ப அட்டை தரர்களுக்கு வார இறுதி நாட்களில் மண்ணெண்ணெய் வினியோகம் செய்யப்படுவது வழக்கம்.
குறிப்பாக 1 லிட்டர் மண்ணெண்ணெய் வாங்க ஏராளமான குடும்ப அட்டை தரர்கள் வார இறுதி நாட்களில் குவிந்து மண்ணெண்ணெய் வாங்கி செல்வது வழக்கம் அதேபோல் தான் இன்றும் மண்ணெண்ணெய் விநியோகப்படுவதை தெரிந்து காலை முதலே அந்த மண்ணெண்ணெய் கடையில் குடும்ப அட்டை தரர்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
அந்த மண்ணெண்ணெய் கடை வழக்கமாக 9 மணிக்கு திறக்க வேண்டிய கடை 9:45 மணிக்கு தான் திறக்கபட்டது. இதனால் அங்கு 300க்கு மேற்பட்ட மக்கள் முண்டியடித்து கொண்டு மண்ணெண்ணெய் வாக குவிந்துள்ளார்கள் அதற்கு பிறகு மண்ணெண்ணெய் கடை திறக்கபட்ட நிலையில் போட்டிபோட்டு அங்கு விநியோகப்படும் 1 லிட்டர் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு முண்டியடித்து கொண்டு சென்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் சிலர் ஆடைகள் கிழிந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது. மேலும் வாயிலில் நீண்ட நேரம் குடும்பத்தாரர்கள் காத்திருந்த நிலையில் அவர்களில் சிலர் மயக்கம் அடைந்தார்கள் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நீலவிவருகிறது. தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் கடையில் மாத இறுதி நாட்களில் தான் மண்ணெண்ணெய் விநியோகிக்க படுகிறது.
10 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தரர்களுக்கு ஒரேநேரத்தில் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படுவதால் இதுபோல் தொடர்ச்சியாக கூட்டம் நெரிசல் ஏற்படுவதும் தள்ளுமுள்ளு ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து வருவதாகவும் மேலும் அங்கு கடையில் பணிபுரிய உள்ள ஊழியர்கள் வந்து முறையாக வந்து மண்ணெண்ணெய் உற்றுவது கிடையாது நேரத்துக்கு வருவது கிடையாது குடும்ப அட்டை தரர்கள் ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்கள்.
அதேபோல அந்த மண்ணெண்ணெய் கடை செயல் படக்கூடிய பகுதி முட்புதர்களும்மண்டி பொதுமக்கள் காத்திருக்க கூடிய சூல்நிலையில் இல்லாத நிலையில் விஷ ஜந்துக்கள் அவர்களை கடிக்கக்கூடிய நிலையில் இருப்பதால இனி வரக்கூடிய காலங்களில் 10 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை தரர்களுக்கு கோரிக்கையாக இருகிறது.