Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கேரள பூஜா பம்பர் லாட்டரி: 12 கோடி ரூபாய் பரிசை வென்ற பால் பண்ணை ஊழியர்..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் பூஜா பம்பர் லாட்டரி டிக்கெடுக்கான குலுக்கல் நேற்று நடந்தது. இதில் முதல் பரிசான 12 கோடி ரூபாய்க்கான டிக்கெட் எண் பாலக்காட்டில் வாங்கிய நபருக்கு அடித்துள்ளது. கேரள மாநில அரசே லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்கிறது. கேரளாவில் தினமும் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. தினசரி டிக்கெட் விற்பனை போக வருடத்திற்கு 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகிறது. ஓணம் பம்பர், பூஜா பம்பர், கிறிஸ்துமஸ் நியூ இயர் பம்பர், சம்மர் பம்பர், விஷு பம்பர், மான்சூன் பம்பர் என 6 பம்பர் டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதில் ஒணம் பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கல் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.25 கோடி கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவருக்கு அடித்தது. அதன்பிறகு பூஜா பம்பர் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.12 கோடி கொல்லத்தில் விற்ற டிக்கெட்டுக்கு (எண்.ஜே.சி. 325526) விழுந்தது தெரியவந்தது. முதல் பரிசு விழுந்த டிக்கெட்டை கருணாகப்பள்ளியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 41) வாங்கியது தெரியவந்தது. இவருக்கு வரிகள் பிடித்தம் போக ரூ.6.12 கோடி கிடைக்க உள்ளது.

லாட்டரியில் முதல் பரிசு வென்றுள்ள தினேஷ்குமார், நீண்ட காலமாக லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கம் கொண்டவராம். இது குறித்து தினேஷ்குமார் கூறுகையில், ஒவ்வொரு முறையும் குறைந்தது 10 டிக்கெட்டுகளை வாங்குவேன். அப்படித்தான் இந்த முறையும் 10 டிக்கெட்டுகள் வாங்கியதில் ஒரு டிக்கெட்டிற்கு பரிசு அடித்துள்ளது. எனக்கு கிடைத்த பரிசுத்தொகையை வைத்து ஏழைகளுக்கு உதவ இருக்கிறேன். பணத்தை கவனமாக செலவு செய்வேன். எனக்கு ஒரு தோட்டம் மற்றும் சிறிய பிஸ்சினஸ் உள்ளது. பால் பண்ணையில் ஊழியராக பணி செய்து வருகிறேன். லாட்டரியில் பரிசு அடிப்பது இதுவே முதல்முறை என்றார்.