Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கமுதி அருகே வேளாண் தொழில் நுட்ப கல்லூரியில் நடந்த உணவு திருவிழா: மாணவர்கள் 200 வகையான உணவுகளை சமைத்து அசத்தல்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்ப கல்லூரியில் உணவு திருவிழா விமர்சியாக நடைபெற்றது. கமுதி அருகே உள்ள இந்த கல்லூரியில் சித்திரை வருட பிறப்பை முன்னிட்டு மாணவர்கள் விறகு அடுப்பில் சமைத்த உணவுகளை கொண்டு உணவு திருவிழா நடத்தப்பட்டது. மாணவர்கள் 25 குழுக்களாக இணைந்து பாரம்பரிய முறையில் இட்லி, குழாய் புட்டு, இலை கொழுக்கட்டை, அப்பம், போலி, திருநெல்வேலி அல்வா, சிக்கன் பிரியாணி, ஆப்பம், நேந்திரபழம் பாயாசம் உள்ளிட்ட 200 வகையான உணவுகளை தயாரித்து இருந்தனர்.

இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் தயாரித்து விற்பனை செய்த உணவுகளை வாங்கி சுவைத்தனர். பெற்றோரிடம் கேட்டறிந்து மாணவர்கள் பலவித உணவுகளை சமைத்து இருந்தது பார்வையாளர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. உணவு திருவிழாவை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்களின் பரதநாட்டியம், புலி ஆட்டம், காவடி உள்ளிட்ட நடனங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதுவும் பார்வையாளர்களை வெகுவாக ஈர்த்தது. விழா முடிவில் மாணவ குழுக்கள் தயாரித்த உணவு வகைகளின் சுவை மற்றும் தயாரிப்பு அடிப்படையில் பரிசுகள் வழங்கப்பட்டன.