Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்.. அதிமுக, பாஜக அரசியல் செய்கின்றன: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கண்டனம்..!!

சென்னை: கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பை வைத்து எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும் அரசியல் செய்கின்றனர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர் சந்திப்பில் பதில் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர்;

எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ்.பாரதி பதில்

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலியாக காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அரசு தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு முன்பே முதலமைச்சர் அதிகாரிகளை அழைத்து போதைப் பொருள் கட்டுப்பாடு குறித்து விவாதித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மரணங்களை வைத்து அதிமுக, பாஜக அரசியல் செய்கின்றன: திமுக

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்களை வைத்து அதிமுக, பாஜக அரசியல் செய்வதாக கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அரசியல் செய்யாமல் அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவம் எதிர்பாராத ஒன்று என்று முதலமைச்சர் ஏற்கனவே கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் நாடகமாடுகிறார்: ஆர்.எஸ்.பாரதி

கள்ளச்சாராய உயிரிழப்பை வைத்து எடப்பாடி பழனிசாமியும், பாஜகவும் அரசியல் செய்கின்றனர்.

கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்த உடனேயே நீதி விசாரணை மற்றும் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்துழைக்காமல், எதிர்க்கட்சித் தலைவர் நாடகமாடுகிறார். கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் விவாதிக்க தயாராக இல்லை. கள்ளக்குறிச்சி உயிரிழப்புகளை திட்டமிட்டு அரசியல் செய்கின்றனர். அதிமுக ஆட்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன.

நிர்மலா சீதாராமன் புகாருக்கு ஆர்.எஸ்.பாரதி பதிலடி

தமிழ்நாட்டில் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது தொடர்பான நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டுக்கு ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்துள்ளார். மதுவிலக்கு அமலில் இருந்ததால் தமிழ்நாட்டில் நடந்த கள்ளச்சாராய மரணங்கள் குறித்து ஆய்வு செய்தே மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. உண்மையை புரிந்துகொள்ளாமல் நிர்மலா சீதாராமன் பேசுவதாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். வரலாறை முழுமையாக புரிந்துகொண்டு ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச வேண்டும்.

கள்ளச்சாராய விவகாரத்தில் பாஜகவுக்கு தொடர்பு: ஆர்.எஸ்.பாரதி

கள்ளச்சாராய மரணத்துக்கு காரணமான மெத்தனால் புதுச்சேரியில் இருந்து வந்துள்ளதால் பாஜகவுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக அவர் கூறினார். கள்ளச்சாராய மரணத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் பழனிசாமி நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை கோரியது ஏன்?. பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் விஷச்சாராய மரணங்கள் நடந்துள்ளன. காவல்துறை அமைச்சராக இருந்த பழனிசாமியே தமிழ்நாடு காவல்துறையை இழிவுப்படுத்துவதாகவும், விக்கிரவாண்டி தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு கள்ளக்குறிச்சி விவகாரத்தை அதிமுக, பாஜகவினர் பெரிதுப்படுத்துகின்றனர் என்றும் அவர் கூறினார்.