Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வட மாநிலங்களில் சிறுபான்மையினர் மீதான அத்துமீறல்கள் அதிகரிப்பு : கன்னியாஸ்திரிகள் கைது சம்பவத்திற்கு ஜவாஹிருல்லா கண்டனம்!

சென்னை : பா.ஜ.க ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மாநிலத்தில் கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம். எச். ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் கிருஷ்ணா குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு நபர்களை அந்தக் குடும்பத்தினரின் அனுமதியோடு தங்களது விடுதிக்கு வேலைக்கு அழைத்துச் சென்ற இரண்டு கன்னியாஸ்திரிகளை பஜ்ரங்தள இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர்.

பல்வேறு பொய்யான காரணங்களைச் சொல்லித் தாக்குதலுக்கு உள்ளான கன்னியாஸ்திரிகளைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகிய இரு கன்னியாஸ்திரிகளும் ஆகியோர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் அம் மாநில முதலமைச்சர் இந்தச் செயலை நியாயப்படுத்தி இருப்பது மதவெறுப்பு அரசியல் அந்த மாநிலத்தில் எந்த அளவிற்கு மிகைத்துஇருக்கிறது என்பதை உணர முடிகிறது.

இந்‌த கன்னியாஸ்திரிகள் தொழுநோயாளிகளுக்கு மருத்துவச் சேவை வழங்கி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வட மாநிலங்கள் முழுவதும் சிறுபான்மையினர் மீதான அத்துமீறல்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அரசியல் ஆதாயத்திற்காகச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் அத்துமீறல்கள் போன்றவை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.