தீவுத்திடலில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கு பூர்வாங்கப்பணியை துவக்கி வைத்தார் அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்
சென்னை: சென்னை தீவுத்திடலில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கான பூர்வாங்கப்பணியினை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் துவக்கி வைத்தார். மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் இன்று சென்னை, தீவுத்திடல், சத்தியவாணி முத்து நகரில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கான பூர்வாங்கப்பணியினை துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, கூட்டுறவுத்துறையின் சார்பில் 49 அறிவிப்புகள் சட்டமன்றத்தில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் பல்வேறு தொடர் நடவடிக்கைகள் தமிழக அரசு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



