Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈஷாவில் விமரிசையாக கொண்டாடப்பட்ட பொங்கல் திருவிழா!

isha, maatu pongal* களைகட்டிய நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள்

கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி முன்பு “ பொங்கல் விழா" நேற்றும் இன்றும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் நாட்டு மாடுகளின் கண்காட்சி மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள் பெரும் உற்சாகத்தோடு நடைபெற்றது.

ஈஷாவில் பொங்கல் விழா பாரம்பரிய முறையில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

isha, maatu pongalஇந்தாண்டு கொண்டாட்டங்கள் மண் பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வோடு துவங்கியது. இதில் ஈஷாவை சுற்றியிருக்கும் பழங்குடி மக்கள், தன்னார்வலர்கள், ஆசிரமவாசிகள் என ஆயிரக்கணக்கானோர் இணைந்து பானைகளில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

விவசாயத்தில் மிக முக்கிய பங்காற்றும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஈஷாவில் பராமரிக்கப்படும் நாட்டு மாடுகளுக்கு சிறப்பான முறையில் வழிபாடுகள் செய்யப்பட்டன.

மேலும், அருகி வரும் நாட்டு மாடு இனங்களான காங்கேயம், ஓங்கோல், காங்கிரிஜ், உம்பளாச்சேரி, கிர் உள்ளிட்ட 23 வகையிலான நாட்டு மாடுகளின் கண்காட்சி நடைபெற்றது. ஈஷா கோசாலையில் 700-க்கும் அதிகமான பாரம்பரிய நாட்டு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

isha , maatu pongalஇதனை தொடர்ந்து, மாலையில் தூத்துக்குடி சகா கலைக் குழுவினரின் ஒயிலாட்டம், பறையாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட 7 வகையான தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இவ்விழா இரவு 7 மணியளவில் ஆதியோகி திவ்ய தரிசனத்துடன் நிறைவுப்பெற்றது.

பொங்கல் விடுமுறை நாட்களை முன்னிட்டு நேற்றும் இன்றும் லட்சக்கணக்கான மக்கள் ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.