Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இன்ஸ்டாவில் "டைவர்ஸ்" அறிவித்த துபாய் இளவரசி!: கணவரின் வேறொரு தொடர்பை சுட்டிக்காட்டி பதிவு!!

துபாய் : துபாய் இளவரசி ஷேகா மஹ்ரா தனது கணவருக்கு இன்ஸ்டாவில் விவாகரத்து அறிவிப்பு வெளியிட்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூமின் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை அதிபராகவும் பிரதமராகவும் பதவி வகிக்கிறார். சர்வதேச அரசியலில் செல்வாக்கு பெற்றவர். உலகில் அதிக சொத்து உள்ள முதல் 10 அரச குடும்பத்தை சேர்ந்தவர்களில் ஷேக் முகமதுவிற்கு தனி இடம் உள்ளது. இவரது மகள்களில் ஒருவர் ஷேகா மஹ்ரா.30 வயதாகும் இவர், கடந்த ஆண்டு மே மாதம் ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 12 மாதம் கழித்து குழந்தையையும் இந்த தம்பதி பெற்றெடுத்தது.

இந்த நிலையில், தனது கணவருக்கு இன்ஸ்டாகிராமில் விவாகரத்து அறிவிப்பை கொடுத்து, இளவரசி ஷேகா மஹ்ரா பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளார். வேறு ஒருவருடனான தொடர்பை சுட்டிக் காட்டி உங்கள் நலத்தை பார்த்து கொள்ளுங்கள், தங்களது முன்னாள் மனைவி என இன்ஸ்டாவில் அவர் பதிவிட்டுள்ளார். பெண் உரிமை வழக்கறிஞர் மற்றும் டீசைஞரான ஷேகா மஹ்ரா, குழந்தை பிறந்த 2 மாதத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இனி நாங்கள் இருவர் மட்டுமே என்பது போன்ற படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.