இந்தோனேசியாவில் சொகுசு கப்பலில் நேரிட்ட தீ விபத்து: 5 பேர் உயிரிழந்த நிலையில் 280-க்கு மேற்பட்டோர் தப்பினர்
ஜகார்த்தா: இந்தோனேசியாவில் சொகுசுக் கப்பலில் நேரிட்ட தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 284 பயணிகள் இந்த விபத்தில் இருந்து தப்பியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கேம் பார்சிலோனா என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இந்தோனேசியாவின் தல ஒரு தீவுகளில் இருந்து கிளம்பி வடக்கு சூழ திசையை உள்ள மனோதாவை நோக்கி சென்று கொண்டு இருந்த. இதில் கப்பல் ஊழியர்கள், பயணிகள் உட்பட 280க்கு மேற்பட்டோர் பயணம் செய்ததாக தெரிகிறது. தலாட் தீவு அருகே சென்ற பொது கப்பலில் தீடிர் என்ன தீ பற்றியது. தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அச்சம் அடைந்த பல பயணிகள் உயிரை காப்பாற்றி கொள்ள கடலில் குதித்தனர்.
உடனடியாக கடற்கரை கப்பல்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணிகளும் மீட்பு பணிகளும் துரிக்கப்படுத்தப்பட்டன. உள்ளுர் மீனவர்களும் கடலில் நீந்தி சென்று பயணிகள் மீட்டு கரைக்கு அழைத்து சென்றனர். லைப் ஜாக்கெட் உதவியுடன் ஏராளமானோர் நீந்தி கரைக்கு சென்றனர். கரைவந்து சேர்ந்தவர்கள் அதிர்ச்சியுடன் மீட்பு பணிகளை பார்த்து கொண்டு இருந்தனர். இந்த விபத்தில் 5 பேர் உயிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. தீவிபத்து காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது ஆயிரக்கணக்கான தீவுகள் கொண்ட இந்தோனேசியாவில் படகுகள், கப்பல்கள், விபத்தில் சிக்குவது தொடர் கதையாக உள்ளது.