Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது ராணுவ வீரர்களுக்கு உதவிய சிறுவனின் கல்விச் செலவை ஏற்றது இந்திய ராணுவம்

பஞ்சாப்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு தேனீர், பால், தண்ணீர், லஸ்ஸி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து உதவிய 10 வயது சிறுவன் ஷ்ரவன் சிங்கின் படிப்புச் செலவை ஏற்றது ராணுவம். இந்நிலையில், இந்த சிறுவனின் துணிச்சலை பாராட்டும் வகையில், அவரது முழு கல்வி செலவையும் ஏற்பதாக இந்திய ராணுவம் (Golden Arrow Division of the Indian Army) அறிவித்துள்ளது. சிறுவனை நேரில் அழைத்துப் மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் பாராட்டினார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் என்பது ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் பொதுமக்கள் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ஒரு எல்லை தாண்டிய நடவடிக்கை ஆகும். இது பாகிஸ்தானுக்குள் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து நடத்தப்பட்டது.

இந்த நடவடிக்கை மே 7, 2025 அன்று நடத்தப்பட்டது, மேலும் இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தானின் விமானப்படை தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது

இந்த தாக்குதலின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட ராணுவ வீரர்களுக்கு தேனீர், பால், தண்ணீர், லஸ்ஸி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகித்து 10 வயது சிறுவன் ஷ்ரவன் சிங்கின் உதவினான். றுவனின் துணிச்சலை பாராட்டும் வகையில், அவரது முழு கல்வி செலவையும் ஏற்பதாக இந்திய ராணுவம் (Golden Arrow Division of the Indian Army) அறிவித்துள்ளது. சிறுவனை நேரில் அழைத்துப் மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் பாராட்டி மேஜர் ஜெனரல் ரன்ஜித்சிங் சிறுவனுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.