கீழடி ஆய்வறிக்கையை தாமதமின்றி வெளியிட வலியுறுத்தி மதுரை மண்டல அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகை
மதுரை: கீழடி ஆய்வறிக்கையை திருத்தமின்றி வெளியிடக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மதுரை மண்டல வருமான வரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது இரும்பு கதவுகளின் மீது ஏறி உள்ளே நுழைய முயன்றதால் காவல்துறையினருக்கும் போராட்டகாரர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அமர்நாத் ராமகிருஷ்ணன் சமர்ப்பித்த கீழடி ஆய்வறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும். மத்திய அரசு கூறியதுபோல திருத்தங்கள் எதுவும் செய்யக்கூடாது. தாமதமின்றி வெளியிட வேண்டும் என வலியுறுத்தி மதுரை டிபிகுளம் சாலையில் உள்ள மதுரை மண்டல வருமான வரித்துறை அலுவலகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கிட்டதட்ட 50 மேலானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்கள் அனுமதி என்று அந்த இரும்பு தடுப்புகளின் மீது ஏறி உள்ளே நுழையமுயன்றதால் காவல்துறையினருக்கும் போராட்டகாரர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில். தற்போது வாசலில் அமர்ந்து கீழடி ஆய்வறிக்கை தொடர்பான போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவல் துறையினரும் வருமான வரி அலுவலகத்தில் ஏராளமானோர் குவிக்கப்பட்டுருக்கிறார்.