அமெரிக்கா: இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் 25% வரி விதிப்பு காரணமாக எந்தந்த துறைகள் பாதிக்கக்கூடும், அமெரிக்கர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படுத்தும் என காணலாம். இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு நாளை முதல் 25% வரி விதிக்கப்பட உள்ளதாக அமெரிக்கா அதிபர் டிரம் அறிவித்துள்ளார். டிரம்பின் இந்த நடவடிக்கை காரணமாக ஆண்டுக்கு 129 மில்லியன் டாலர் மதிப்புள்ள இருதரப்பு வர்த்தகமும் பாதிக்கும்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் மருந்து பொருட்கள், வைரம் மற்றும் நகைகள், ஜவுளி ஆடைகள், இயந்திரங்கள், ரசாயனங்கள், வாகனங்கள் மற்றும் இரும்பு, பித்தளை பொருட்கள் போன்ற முக்கியமான இந்திய ஏற்றுமதி துறைகளை பாதிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 2025ல் நிதியாண்டில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 10 மில்லியன் டாலர்களுக்கு மேல் ஜெனரிக் மருந்துகள் மற்றும் மருந்து மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
புற்றுநோய், நீரிழிவு, இதயம் மற்றும் தொற்று நோய்களுக்கான முக்கிய மருந்துகள் இதில் அடங்கும். இந்திய ஜெனரிக் மருந்துகளுக்கான வரி, அமெரிக்க நோயாளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு மருந்து செலவுகளை அதிகரிக்கக்கூடும். 2024ம் ஆண்டில் 10.8 பில்லியன் டாலர் மதிப்புக்கு அமரிக்காவுக்கு ஆடை ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில், புதிய வரி ஜவுளித்துறையில் ஆர்டர் அளவு குறையும் என்றும் வேலை பறிபோகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஜவுளிக்கு அடுத்தபடியாக நகைகள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது
. 2025 நிதியாண்டில் இந்தியா 12 பில்லியன் டாலர் அளவுக்கு வைரங்கள் மற்றும் நகைகளை ஏற்றுமதி செய்தது. 30% அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது. ஏற்கனவே அமெரிக்காவில் நகைகள் மீதான வரி விதிப்பு 27% ஆக இருக்கும் நிலையில், கூடுதலாக 25% வரி விதிக்கப்படுகிறது. 2024ம் ஆண்டில் இந்தியா 2.8 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆட்டோ உதிரி பாகங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதில் இயந்திர பாகங்கள், பிரேக்குகள், கியர் அசெம்பிளிகள், வயரிங் ஹார்னெஸ்கள் அடங்கும்.
இதன் மூலம் 25% வரி கார் பழுது பார்க்கும் செலவு அதிகரிக்கக்கூடும் மற்றும் உதிரி பாகங்கள் ஏற்றுமதியை சீர்குலைக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் இருந்து செல்போன்கள் மொத்த ஏற்றுமதியில் பெரும்பகுதி அமெரிக்காவுக்கு செல்கிறது. 2025ம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் ஃபாக்ஸ்கான் ஏற்கனவே 4.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள 2.4 கோடி ஐபோன்களை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ள நிலையில், தற்போதைய வரி விதிப்பால் ஐபோன் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.